உள்ளூர் செய்திகள்

மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் பள்ளி மாணவரிடம், பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,39; இவர், 11 வயது தனியார் பள்ளி மாணவரை, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பாதிக்கப்பட்ட மாணவர், நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார்.புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, 'போக்சோ' சட்டத்தில் நேற்று வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்