உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டுக்கு ரூ.4,200 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்தத் திட்டம், 175 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 100 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட மொத்தம் 275 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்நுட்பக் கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.இது தவிர, தொழில்நுட்பக் கல்வித் துறையைக் கையாளும் மாநில/யூனியன் பிரதேசத் துறைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.இந்த முயற்சி, விரிவான மற்றும் பன்முக அணுகுமுறையின் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வேலைவாய்ப்பை உயர்த்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்