உள்ளூர் செய்திகள்

மூன்றாண்டு பி.எல்., படிப்பு: 450 இடங்கள் நிரம்பின

சென்னை: மூன்றாண்டு பி.எல்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவில், 450 இடங்கள் நிரம்பின. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள, மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பில், 1,262 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் நடந்த பொது பிரிவினருக்கான கலந்தாய்வில், 369 மாணவர் கலந்து கொண்டனர். கலந்தாய்வு முடிவில், 242 இடங்கள் நிரம்பின. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்காக நேற்று நடந்த கலந்தாய்வில், 300 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வு முடிவில், 213 இடங்கள் நிரம்பின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்