உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணி துவங்க அனுமதி

சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை துவங்க தமிழக சுகாதாரத்துறை அனுமதித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று (மே 20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை துவங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் பயிற்சிபெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவ பணி என்ற விதி இருந்தது. அதேபோல், வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள், பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இரு விதிகளையும் தளர்த்திய தமிழக அரசு, அவர்கள் மருத்துவ பணியை துவங்க அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்