உள்ளூர் செய்திகள்

ஐடிஐ மேம்பாட்டுக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு

சென்னை: தொழிற்கல்வியில் மாறுபாட்டை உருவாக்கும் முக்கிய முயற்சியாக, மத்திய அமைச்சரவை 1,000 அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐ) மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 மற்றும் 2025-26 பட்ஜெட்டுகளில் இதற்காக மொத்தமாக ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.30,000 கோடி, மாநில அரசுகள் ரூ.20,000 கோடி மற்றும் தனியார் தொழில்துறை ரூ.10,000 கோடி பங்களிக்கின்றன.இந்தத் திட்டத்தின் மூலம், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், கான்பூர் மற்றும் லூதியானா ஆகிய ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 20 லட்சம் இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெறுவார்கள். மேலும், 50,000 பயிற்சியாளர்களுக்கு சேவைக்கு முன்பும் சேவையின் போதும் தொழில் சம்பந்தமான பயிற்சி அளிக்கப்படும்.இந்த முயற்சி, தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திறன் மிக்க பணியாளர்களை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்