உள்ளூர் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி.சி.,61 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இஸ்ரோ இன்று தன்னுடைய 101வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது. இதற்கான 22 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது.ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். பி.எஸ்.எல்,வி., சி-61 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்