எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பேராசிரியர்களுக்கான 7 நாள் புத்தாக்க பயிற்சி
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, சென்னை அண்ணா பல்கலை இணைந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறை பேராசிரியர்களுக்கான ஏழுநாள் புத்தாக்க பயிற்சி நடத்தின. பல்வேறு இன்ஜி.,கல்லூரிகளில் 25 துணை பேராசிரியர்கள் பங்கேற்றனர். மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியைகள் தேன்மொழி, மணிமேகலை, காமராஜ் இன்ஜி., கல்லூரி பேராசிரியர்கள் பிரின்ஸ் வின்ஸ்டன், கல்யாணி, கோவை அண்ணா பல்கலைகழக மண்டல நிலைய பேராசிரியர் விஜயபாஸ்கர், பெங்களூரு என்டபிள் டெக்னாலஜி நிறுவன இன்ஜினியர்கள் பயிற்சி வழங்கினர்.