உள்ளூர் செய்திகள்

அரசு பேருந்தில் தகராறு: 7 மாணவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே,பத்மநாபமங்களம் பகுதியில், அரசு பஸ்சில் பயணம் செய்த கே.ஜி.எஸ்., கல்லூரி மாணவர்கள், பெண்களை கேலி செய்துள்ளனர். இதை, தோழப்பண்ணையை சேர்ந்த உலகு, 49, என்பவர் கண்டித்துள்ளார். இதனால், உலகு மற்றும் அவரது உறவினர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், கற்களால் தாக்கி கொண்டனர். உலகு கொடுத்த புகாரையடுத்து, மாணவர்கள் ஏழுபேர் மீதும், மாணவர் ஒருவர் கொடுத்த புகாரையடுத்து, ஆறு பேர்மீதும், போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்