உள்ளூர் செய்திகள்

யோகாசனப் போட்டிகளில் கலக்கிவரும் 8ம் வகுப்பு மாணவி

திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தேவஸ்ரீ, பல்வேறு யோகாசன போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று வருகிறார். சமீபத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரை, முதன்மை கல்வி அலுவலர் முருகன், தலைமையாசிரியர் போஜன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். கடந்த 2013ல், தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றார். அதே ஆண்டு, மாவட்ட யோகா சங்கம் நடத்திய மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்தார். மாவட்ட அளவிலான போட்டிகளிலும், தேவஸ்ரீக்கே முதலிடம் கிடைத்தது. அம்மாணவி கூறும்போது, "மார்ச் மாதம் சிங்கப்பூரில் சர்வதேச யோகா போட்டி நடக்கிறது. அதில் வெற்றிபெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்