உள்ளூர் செய்திகள்

சீர்திருத்த பள்ளியில் இருந்து 8 சிறுவர்கள் தப்பியோட்டம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில், சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த எட்டு சிறுவர்கள் தப்பியோடினர்.சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மஹாசமுந்த் மாவட்டத்தின் கோட்வாலி நகரில், அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட, 27 சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 03:00 மணிக்கு எட்டு சிறுவர்கள் ஜன்னல் கம்பியை முறித்து சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பினர். அவர்கள் அனைவரும், 14 - 17 வயதுக்குட்பட்டவர்கள். தப்பியோடிய சிறுவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்