உடுமலை பள்ளிகள் தேர்ச்சி 95 சதவீதம்
உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், உடுமலையில் 95 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது.கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வுத்துறையினரால் இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் ஆர்வத்துடன் ஆன்லைனில் பார்வையிட்டனர்.உடுமலை வட்டாரத்தில், 34 பள்ளிகளில், 2,877 பேர் தேர்வு எழுதி, 2,761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 95 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது. குடிமங்கலம் வட்டாரத்தில், 13 பள்ளிகளில், 708 பேர் தேர்வு எழுதி, 668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 94 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது.மடத்துக்குளத்தில், 14 பள்ளிகளில், 774 பேர் தேர்வு எழுதி, 735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.