உள்ளூர் செய்திகள்

சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு துவக்கம்

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 6ம் தேதி துவங்குகிறது. சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2011-12 கல்வியாண்டுக்கான சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுலை 6ம் தேதி துவங்குகிறது. 9ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் இதர பிரிவினருக்கும, இரண்டாம் நாளில் தாழ்த்தப்பட்ட மற்றும பழங்குடியின பிரிவினருக்கும், மூன்றாம் நாளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், கடைசி நாளான 9ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சட்டப் பல்கலைக்கழகத்தின் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 7 கல்லூரிகளில் உள்ள சட்டப் படிப்பிற்கு 1,052 இடங்கள் உள்ளன. இதில் சேர 2990 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 280 விண்ணப்பங்கள் தகுதி இல்லாததால் நிராகரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்