தொழிற்பிரிவு கலந்தாய்வு நிறைவுபெற்றது
ஜுலை 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில் 2948 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர். தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கடைசி நாள் கலந்தாய்விற்கு 374 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 74 பேர் வரவில்லை. 22 பேர் பாடப்பிரிவை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர். மீதமுள்ள 278 மாணவர்கள் தாங்கள் விரும்பிய பொறியியல் படிப்பை தேர்வு செய்து அதற்கான அனுமதி ஆணையையும் பெற்றுச் சென்றனர். சென்னை அண்ணா பல்கலையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற பொறியியல் தொழிற்பிரிவு கலந்தாய்வில் 3429 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, 2948 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்கு, பாடப்பிரிவை தேர்வு செய்யாமல் 58 பேர் தவிர்த்துள்ளனர். 423 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. ஜுலை 7ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 8ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்க உள்ளது.