உள்ளூர் செய்திகள்

இன்ஜினியர்களின் தேவை அதிகரிக்கும்

பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி பி.ஏ., பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. சி.டி.எஸ்., நிறுவன துணைத்தலைவர் லட்சுமி நாராயணன் வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது: "போட்டிகள் நிறைந்த உலகில் சமாளிக்கும் வகையில், பட்டபடிப்பு தேவை. கிடைக்கும் வேலையில் ஈடுபாட்டுடன் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். வரும் 15 ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு விமானங்கள் வாங்க இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்படி, 0.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இன்ஜினியர்கள் அதிகளவில் தேவையாக உள்ளனர். பொறியியல் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு அதிகம். ஸ்மார்ட் போன் உற்பத்தி தொழிலில், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் தயார் செய்தால், அதிக விலையுள்ள போன்களின் விலை குறைந்துவிடும் வாய்ப்புள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்