பள்ளிகளில் கண்காணிப்பு அவசியம்
பள்ளிகளில் ராக்கிங் மற்றும் ஈவ் டீசிங்கை தடுக்க தீவிர கண்காணிப்பு அவசி யம் என ரூரல் டி.எஸ்.பி., கூறியுள்ளார். ஊட்டி ஊரக உட் கோட்ட போலீசார் சார்பில் பள்ளிகளில் ராக்கிங் நடப்பதை தடுப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மஞ்சூர், பிக்கட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. எஸ்.ஐ., ராம கிருஷ்ணன் வரவேற்றார். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஊட்டி ஊரக உட் கோட்டத்தை சேர்ந்த அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தை துவக்கி வைத்து ஊட்டி ரூரல் டி.எஸ்.பி., அனிதா பேசியதாவது, "ராக்கிங் செய்வதால் மாணவ, மாணவியரின் மனநிலை பாதிக்கப்படுவதுடன், சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் ராக்கிங் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.