பி.எட்., கலந்தாய்வு தொடங்கியது
சென்னை: பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பி.எட்., படிப்பிற்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. பி.எட்., படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை கடற்கரை சாலையிலுள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்று, மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாடவாரியாக கலந்தாய்வு, ஒற்றை சாளர முறையில் நடைபெறவுள்ளது.