முதலாமாண்டு அறிவுக் கண்காட்சி
சிவகங்கை: சிவகங்கை புனித சேவியர் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளியில் முதலாமாண்டு அறிவுக் கண்காட்சி நடந்தது. அறிவியல் மன்றம், கணிதமன்றம், இலக்கிய மன்றம், உடற்கல்வி மன்றம் ஆகிய மன்றங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் தங்களது செயல்முறை விளக்கமளித்தனர்.