உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி

கோவை: பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் கிக்கானி மெட்ரிக் பள்ளி காலிறுதிக்கு தகுதி பெற்றது. கோபால்நாயுடு கல்வி அறக்கட்டளை சார்பில், ராவ் பகதூர் ஸ்ரீகோபால் நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான கால்பந்து போட்டி, கோபால்நாயுடு பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. * முதல் சுற்று போட்டியில், கிக்கானி மெட்ரிக் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியை வென்றது. கிக்கானி பள்ளியின் நவீன் ஆட்டத்தின், 18வது, 46 நிமிடங்களில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2வது போட்டியில், எஸ்.பி.ஓ.ஏ.,மெட்ரிக் பள்ளி 5-0 கோல் கணக்கில் சர்வஜனா பள்ளியை வென்றது. எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியின் சந்திப் ஆட்டத்தின் 2வது, 10 வது நிமிடங்களில் இரு கோல்களும், சபரிஷ் 25வது நிமிடத்தில் ஒரு கோலும், ராகுல் 35, 40 வது நிமிடங்களிலும் இரு கோல்களும் அடித்தனர். * 2வது சுற்று முதல் போட்டியில், கோபால்நாயுடு பள்ளி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்டேன்ஸ் ஐ.சி.ஐ.சி., பள்ளியை வென்றது. கோபால்நாயுடு பள்ளியின் பாலாஜி 18, 25 நிமிடங்களிலும், அபிஷேக் 33வது நிமிடத்திலும்; ஸ்டேன்ஸ் ஐ.சி.ஐ.சி., பள்ளியின் முரளிதரன் 26வது நிமிடத்திலும், அபிஷேக் 30வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். 2வது போட்டியில், ரசகொண்டலார் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சித்தாநாயுடு பள்ளியை வென்றது. ரசகொண்டலார் பள்ளியின் சத்தியநாராயணன், நவீன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 3வது போட்டியில், கிக்கானி மெட்ரிக் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியை வென்றது. கிக்கானி பள்ளியின் நவீன் ஆட்டத்தின் 7 வது, 59வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்தார். 4வது போட்டியில், கார்மல்கார்டன் மெட்ரிக் பள்ளி 5-1 என்ற கோல் கணக்கில் வித்யாநிகேதன் மெட்ரிக் பள்ளியை வென்றது. கார்மல் கார்டன் பள்ளியின் ஜோனத்தான் 50வது நிமிடத்தில் ஒரு கோலும், சர்ப்ரேஷ் 17, 19, 48 வது நிமிடங்களில் மூன்று கோல்களும், சாம் 43 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்