உள்ளூர் செய்திகள்

ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில், சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மாணவ மாணவியருக்கு, ஓடும் ரயிலில் ஓவிய போட்டி நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4:00 மணிக்கு புறப்பட்ட விழுப்புரம் பயணிகள் ரயிலில், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது. அவுட் லைனிங் ஓவியங்கள் வரையப்பட்ட தாள் வழங்கினர். இதில் 250 மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.விழுப்புரம் வரை ஓவியங்கள் வரைந்து சென்று, மாலை 6:30 மணிக்கு, புதுச்சேரி திரும்பினர். அவர்களுக்கு, பிஸ்கட் தண்ணிர் பாக்கெட்டுகள் வழங்கினர். ஏற்பாடுகளை திருவள்ளுவர் கலைக்கூடஉதவி தலைவர் கோவிந்தராஜன், செயலர் சிவக்குமார், செய்திருந்தனர். போட்டி முடிவுகள் செப்., 8 ம் தேதி வெளியிடப்படும் என கூறினர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்