திறனாய்வு தேர்வுஅவகாசம் நீட்டிப்பு
சென்னை: தேசிய திறனாய்வுத் தேர்வு விவரங்களை பதிவேற்றம் செய்ய, வரும் 30ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:நவம்பர், 8ல் நடக்கவுள்ள, தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் விவரங்களை, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வரும் 30ம் தேதி வரை, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். மீண்டும் காலநீட்டிப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.