உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தில், தேசிய அஞ்சல் வார விழா, கடந்த, 9ம் தேதி, துவங்கி, 15ம் தேதி வரை நடத்தப்படுகிறது. போட்டியில் இன்று, அஞ்சல் தலை சேகரிப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இதில், 1ம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை; 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு, கடிதம் எழுதும் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தபோட்டிகள், நடைபெறும் இடங்கள்: செங்கல்பட்டில், புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கழுக்குன்றத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், கூடுவாஞ்சேரியில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்போரூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், மதுராந்தகத்தில், இந்து மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. இதில், அப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், கலந்து கொள்ளலாம். இவ்வாறு, கோட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்