ஆசிரியர்களுக்கு ரைட்டிங் பயிற்சி
நாமக்கல்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கொல்லிமலை வட்டார வளமையத்துக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழ் ரீடிங் ரைட்டிங் என்ற தலைப்பில் பயிற்சி முகாம், நாமக்கல்லில் இரண்டு நாட்கள் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஏ.இ.இ.ஓ., பிரபுகுமார் துவக்கி வைத்தார். பயிற்சியில், மாணவர்களிடையே தமிழில் பேச்சு மற்றும் எழுத்துத்திறன் வகுப்பு வாரியாக எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் மனோகரன், ரமேஷ்குமார், அமுதா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.