அண்ணாமலை பல்கலைக்குகுண்டு மிரட்டல்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, மர்ம நபர் ஒருவர், 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம், பல்கலை வளாகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்; வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. போலி மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.