உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை

பேரையூர்: மதுரை டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளி மாணவர் புதுப்பட்டி வெங்கடேசன்,17, மொத்தம் 1118 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். பத்து வயதில் விபத்தில் சிக்கி வலது கை, கால் ஊனமானது. வீட்டில் முடங்கி கிடக்காமல் படித்து, விடாமுயற்சியுடன் 12ம் வகுப்பு தேர்வை வெங்கடேசன் எழுதினார். வலது கையில் எழுதும் திறன் குறைவாக இருந்ததால், தேர்வுத்துறை இவருக்காக ஒருமணி நேரம் கூடுதலாக ஒதுக்கி தேர்வு எழுத உதவியது. இதன் காரணமாக, தமிழ் 181, ஆங்கிலம் 172, கம்ப்யூட்டர் சயின்ஸ் 187, பொருளாதாரம் 193, வணிகவியல் 199, கணக்கு பதிவியலில் 186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வெங்கடேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளி என்று நினைத்து வருந்தாமல், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் ஆசிரியர்கள் உதவியுடன் படித்ததால், இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளேன். பி.காம், பின்னர் சி.ஏ., படிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்