மாணவர்களுக்கு தேவை ’ஏழு’
இந்தியாவின் எதிர்காலம், மாணவர் கையில் தான் உள்ளது. அந்த பொறுப்புணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். மாணவப் பருவத்தில், நல்ல வழிகாட்டியைக் கொண்டிருப்பவர்கள் முன்னேறி விடு-வர். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல், அல்லது வழிகாட்டு-தல்களை புறக்கணிக்கும் மாணவர்கள் திசைமாறி நிற்கிறார்கள். நல்ல விஷயங்களை பார்த்தோ, படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு உதவும் எனில் அந்த நல்ல விஷ-யங்களை, கடைபிடிப்பதில் தவறில்லையே. இன்றைய இளை-ஞர்கள் அறிவுரையை வெறுப்பதற்கு கார-ணம், அதைக் கடை-பி-டிப்ப-தில் உள்ள சிக்கல்களே. மாணவப் பருவத்திலிருந்து கடைப்பிடிக்க வேண்டிய ஏழு குணாதிசயங்கள்: உங்களையும் நேரத்தையும் நிர்வ-கிக்க பழகிக் கொள்ளுங்கள்.பிரச்னையை எதிர்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் பழக்கத்துக்கு தள்ளப்படுவீர்கள்.நீங்கள் செய்யும் விஷ-யம் சரியானதுதான், என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.பிரச்னைகளை தீர்க்கும் வழிகளை ஆராயும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே மாறுதலுக்கு வழி வகுக்கும்.தன்னம்பிக்கை, சுயகவுரவம் ஆகியவை முக்கியமானது என்று கருதுங்கள்.எல்லா விஷயத்தையும் ஆழமாகவும், சரியாகவும் அணுகுங்கள். ஒரு வேலையை எடுத்தால் திறமையாக முடியுங்கள்.ஓய்வு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.இவை அனைத்தை-யும் கடைபிடித்து வரும் போது, சிறப்பான வாழ்க்கைக்கு அடித்தளத்தை சரியாக அமைக்க முடியும். பெண்கள் கல்விக்கு பெருமை சேர்க்கும் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் பெண்கள் கல்விக்கு பெருமை சேர்க்கும் வி.பி.எம்.எம்.,மகளிர் கல்வி நிறுவனம் 6 ஆயிரம் மாணவிகளுடன் சிறப்பாக கல்வி பணியாற்றி வருகிறது. பெண்கள் மட்டுமே படிக்கும் இக்கல்லுாரியில், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பையும் பெற்று தருகிறது. சிறந்த கட்டமைப்பு, திறமையான பேராசிரியர்கள், காற்றோட்டமான வகுப்பறைகள், போதுமான ஆய்வகங்கள், சிறந்த விடுதி வசதி உள்ளன. சிவில், இ.சி.இ.சி.எஸ்இ., இ.இ.இ., மற்றும் பி.டெக் இன்பர்மேசன் டெக்னாலஜி படிப்புகளும், தமிழகத்தில் பெண்கள் மட்டுமே பயிலும் ஆர்க்கிடெக்சர் கல்லுாரியும், கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் அனைத்து இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாடபிரிவுகளும் உள்ளன. 4 வருட படிப்பான பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளும், கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. தற்போதைய கல்வியாண்டிற்கான சேர்க்கை நடக்கிறது. விபரங்களுக்கு 74026 -20218.