உள்ளூர் செய்திகள்

புதிய சி.இ.ஓ., பொறுப்பேற்பு

கோவை: கோவை மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்தி நேற்று பொறுப்பேற்றார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக(சி.இ.ஓ) பணிபுரிந்து வந்த சேதுராம வர்மா, சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் ஆக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஆனந்தி என்பவர் புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்., 21ம் தேதி பொறுப்பேற்றார். திருப்பூர் கல்வி அலுவலராக பணிபுரிந்த இவர், அங்கிருந்து விருதுநகர் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலராக பதவியுயர்வு பெற்றுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்