எம்.பில்., படிப்பு நிறுத்தம்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டில், நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், புதிய கல்வி கொள்கை அமலாகிறது. அதில் கூறியுள்ளபடி, &'எம்.பில்., படிப்புகளில், இந்த ஆண்டு முதல் மாணவர்களை சேர்க்க வேண்டாம்&' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள, 125 கலை, அறிவியல் கல்லுாரிகளில், எம்.பில்., படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கல்லுாரிகளுக்கும் பல்கலை சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.