மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு
உத்திரமேரூர்: எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்துவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம், வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.கொரோனா தொற்றால் மாணவ - மாணவியர் பள்ளிக்கு வரமுடியாத நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்துகிறது. மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரிடம், கல்வி தொலைக்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை சிவகலைவாணி தலைமையிலான ஆசிரியர், ஆசிரியைகள், நேற்று, ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கு சென்று, கல்வி தொலைக்காட்சி குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். வீட்டிலிருந்தே, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, தினமும் பாடம் படிக்கலாம் என, அவர்களிடம் எடுத்து கூறினர்.