உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவராக நியமிக்கப்பட்ட பாலச்சந்திரன், உறுப்பினர்கள் பாலுசாமி மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் மட்டும் பதவியில் இருந்தனர். மற்ற ஒன்பது உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்தன.இந்நிலையில் தி.மு.க., ஆட்சி வந்ததும், புதிதாக நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முனியநாதன், ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகிய நான்கு புதிய உறுப்பினர்களும் நேற்று பொறுப்பேற்றனர். அவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்