உள்ளூர் செய்திகள்

தேர்வு நேரம் எப்போது?

வழக்கமான நேரத்தில் துவங்கி நடக்கும் என்றாலும், சில தேர்வுகள் பிற்பகலிலும் நடக்கும். எனவே, காலைத் தேர்வுகள், பிற்பகல் தேர்வுகள் என்று குறிப்பிட்டு, தேர்வு நேரமும் வழக்கமாக அறிவிக்கப்படும். இந்த முறை, இது எதுவுமே இடம்பெறவில்லை. எனினும், பிளஸ் 2 தேர்வுகள் காலை 10.15க்கு துவங்கி, பிற்பகல் 1.15 வரை-யும் (மூன்று மணி நேரம்), 10ம் வகுப்பு தேர்வுகள், 10.15க்கு துவங்கி, 12.45க்கும் (இரண்டரை மணி நேரம்) முடிவடையும். தேர்வுகள், 10.15க்கு துவங்கினாலும், மாணவர்கள் 10 மணிக்கு, தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். முதல் 10 நிமிடம், வினாத் தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடம், பதிவெண் உள்ளிட்ட விவரங்களை விடைத் தாளில் பூர்த்தி செய்யவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. விடை எழுதுவதற்கான நேரம், 10.15 மணிக்கு துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்