குவைத்தில் வழிகாட்டி நிகழ்ச்சி
குவைத்: குவைத் இந்திய முஸ்லிம் சங்கத்தின் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வியாளர்கள் அப்துல்லா தாக்கூர், டாக்டர் நவ்ஜோத் கவுர் உள்ளிட்டோர் உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், சவால்களை உடைத்து உயர் நிலையை அடையும் விதம் குறித்து விவரித்தனர்.அதனை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு விளக்கமான பதில்களை வழங்கினர். இந்திய முஸ்லிம் சங்க துணைத் தலைவர் அர்ஷத் ஹபீப், முன்னாள் தலைவர் மசூத் சக்பாப் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். பஹீம் பட்டேல் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் குவைத் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர்களும், மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.