ஒலிப்பாடங்கள் சரிபார்ப்பு பயிற்சி
உடுமலை: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒலிப்பாடங்களை, சரிபார்ப்பதற்கான பயிற்சி பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கற்றலை எளிமைப்படுத்த, அனைத்து பாடங்களையும் அவர்களுக்கு ஏற்ப ஒலிவடிவிலும் வழங்குவதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இப்பயிற்சி அளிக்கிறது. கொரோனா காலகட்டத்தில், பாடங்கள் ஒலிவடிவில் மாற்றப்பட்டுள்ளது. தற்போது அப்பாடங்களை மீண்டும் சரிபார்த்தும், எளிமையான முறையில் மாணவர்கள் கேட்டு கற்றுக்கொள்ளும் வகையில் வழங்குவதற்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது. உடுமலையில் நடந்த பயிற்சியை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பாபி இந்திரா, சுப்ரமணி, சரவணகுமார் வரலாறு பாடத்துக்கான ஒலிப்பாடங்களை சரிபார்ப்பது குறித்து, பயிற்சி அளித்தனர்.