இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு
கோவை: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கையின் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று (7ம் தேதி) நடைபெறுகிறது.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மே 29 முதல் பல்வேறு கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி வகுப்பும் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லுாரிகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு, கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு கலை கல்லுாரி முதல்வர் உலகி கூறுகையில், இன்று (7ம் தேதி) நடக்கும் இறுதிக்கட்ட கலந்தாய்வில், விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் என யார் வேண்டு மானாலும் பங்கேற்கலாம். காலியாக உள்ள இடங்களில் அரசு விதிமுறைப்படி மாணவர்கள் சேர்க்கப்படுவர், என்றார்.