உள்ளூர் செய்திகள்

மணற்கேணி செயலி அறிமுகம்

இந்த செயலி வெளியீட்டு நிகழ்ச்சி, தாம்பரத்தை அடுத்த சேலையூர், தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாலை நடந்தது. மணற்கேணி- கற்போருக்கான செயலியை, யு.என்.சி.சி.டி., எனும் ஐ.நா., சபை அமைப்பின் துணை பொதுச் செயலர் இப்ராஹிம் தயாவ் வெளியிட்டார். மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இணைய வழியில் கற்கலாம். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே, காணொலி பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றும் நோக்கத்திலேயே, இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மகேஷ், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா, மண்டல தலைவர் காமராஜ் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்