உள்ளூர் செய்திகள்

கவுரவ பேராசிரியர்கள் கடிதம்

ஷிவமொகா: கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் இல்லாமல் அவதிப்படும் கவுரவ பேராசிரியர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்குமாறு அரசுக்கு, கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடகா முழுதும், பட்டப் படிப்பு கல்லுாரிகளில் கவுரவ பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மூன்று மாதங்களாக, ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் இல்லாமல், வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஷிவமொகாவின், ஹொளேஹொன்னுரு பி.யு.சி., கல்லுாரி கவுரவ பேராசிரியர்கள், அரசுக்கு விசித்திரமான முறையில் கடிதம் எழுதியுள்ளனர்.இதில் அவர்கள் கூறியுள்ளதாவது:கடந்த மூன்று மாதங்களாக, கவுரவ பேராசிரியர்களுக்கு, அரசு ஊதியம் வழங்கவில்லை. ஏழைகளான நாங்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறோம். எங்களை நம்பியுள்ள குடும்பத்தினர், பட்டினியாக உள்ளனர். மாநில அரசு, எங்களுக்கு ஊதியம் வழங்கும் வரை, எங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். எங்களுக்கு 25 கிலோ அரிசி, 5 கிலோ தக்காளி, 10 கிலோ வெங்காயம், 1 கிலோ மிளகாய் வற்றல், 2 கிலோ பாசிப்பருப்பு, 2 கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ பூண்டு, கால் கிலோ இஞ்சி, தேவையான அளவு பால், தயிர், ஒரு எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்