நீதிபதி தேர்வுக்கு பயிற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக சிவில் நீதிபதி , மாவட்ட நீதிபதி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தொடங்கி வைத்தார். திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.வழக்கறிஞர் செந்தில்குமார், திருச்சி சட்டக் கல்லுாரி பேராசிரியர் இன்பசேகரன் பயிற்சி அளித்தனர்.