சட்ட ஆலோசகராக விண்ணப்பிக்கலாம்
மதுரை: மதுரை போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் பதவி காலியாக உள்ளது. இப்பணிக்கு ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சேர விரும்புவோர் ஆக. 20 க்குள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எல்., பட்டம், பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டு சட்டத்துறையில் குற்றம், அரசு பணியாளர் பணி விதிகள் குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்ற பணி அனுபவம் தேவை. குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும், என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.