உள்ளூர் செய்திகள்

ஓய்வு ஆசிரியர்கள் தர்ணா

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 வயது பூர்த்தியானவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும்.மருத்துவ காப்பீட்டுத் திட்ட செலவினத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மணி வரவேற்றார். போடி வட்டக்கிளை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் பூங்குன்றன், பொருளாளர் தாமரை மணாளன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆண்டவர், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, துணைத் தலைவர் ஜெயபாலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமதுசரீப் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்