பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சி
சென்னை: போரூர் ராமச்சந்திராவில் பொறியியல் தொழில்நுட்ப மாணவர் கண்காட்சி நடைபெற உள்ளது.ராமச்சந்திரா பல்கலை வெளியிட்ட செய்தி குறிப்பு:ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை, வரும் 17, 18ம் தேதிகளில் டெக் எக்ஸ்போ 23 மற்றும் இன்னோவாயேஜ் 23 ஆகிய இரண்டு நிகழ்வுகளை நடத்த உள்ளது.இதில், ஐடியாதான், ப்ராக்ஜக்ட் எக்ஸ்போ, சைன்ஸ் டிரிவியா ஆகிய மூன்று பிரிவுகளில், அறிவியல் ஆர்வத்தையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்னோவாயேஜ் 23 என்ற நிகழ்வில், மாணவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டு கல்வி, தொழில் நிறுவனங்களுக்கிடையே கூட்டு முயற்சிகள் ஏற்படுத்தப்படும். இயந்திர கற்றல் மாதிரிகளை மாணவர்கள் உருவாக்கலாம். இதில் ஆசிரியர்கள், தொழில் முனைவோர், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.