புத்தக கண்காட்சி துவக்கம்
மதுரை: தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட மைய நுாலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் தேசிய புத்தகக் கண்காட்சி துவங்கியது.மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி தலைமை வகித்தார். நுாலகர் மாலா வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் புலத் தலைவர் பேராசிரியர் ராமராஜ பாண்டியன் துவக்கி வைத்தார். பேராசிரியர் கருப்பத்தேவன் முதல் விற்பனையை துவக்கி வைக்க, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் செல்லா பெற்றுக் கொண்டார்.பல்கலை ஒப்பிலக்கியத் துறை பேராசிரியர் ரவிசங்கர், கவிஞர் ரா.ரவி, செயின்ட் மேரிஸ் பள்ளி தமிழாசிரியர் சந்திரன் பங்கேற்றனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மேலாளர் மகேந்திரன், நுாலக பணியாளர்கள் செய்திருந்தனர்.