உள்ளூர் செய்திகள்

படிக்கட்டு மாணவர்கள் உறுதிமொழி

மதுரை: மதுரையில் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணித்த பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து உறுதிமொழி எடுக்க வைத்தனர்.பஸ் படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்களில் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். சமீபத்தில்கூட சென்னை குன்றத்துாரில் பள்ளி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி இரு கால்களையும் இழந்தார். இதைதொடர்ந்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மதுரை மூன்றுமாவடி, அய்யர்பங்களாவில் நேற்று படிக்கட்டுகளில் பயணித்த பள்ளி மாணவர்களை தல்லாகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ், வட்டார போக்குவரத்து வடக்கு ஆய்வாளர் முரளி, எஸ்.ஐ., சின்னகருத்தபாண்டி தலைமையிலான போலீசார் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இனி படிக்கட்டுகளில் பயணிக்க மாட்டோம் என மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர். டிரைவர், கண்டக்டர்களுக்கும் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்