விருதுநகர் புத்தகத்திருவிழா நிறைவு
விருதுநகர்: மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்த புத்தகத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.புத்தகத்திருவிழா நவ. 17ல் துவங்கியது. பள்ளி மாணவர்கள் வந்து புத்தகங்களை பார்வையிட்டு வாங்கி சென்றனர். மாலை 4:00 மணி முதல் பள்ளி மாணவர்கள், தனிநபர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விருதுநகர் மாவட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.நிறைவு நாளான நேற்று கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். இந்த புத்தக கண்காட்சியை 12 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாகவும், ஒரு கோடி புத்தகங்கள் விற்பனை ஆனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.