உள்ளூர் செய்திகள்

பல்கலை தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னை: சென்னை மற்றும் அண்ணா பல்கலை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு, இன்று நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள், புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இளங்கோவன் வெள்ளைச்சாமி அறிவித்துள்ளார்.அதேபோல, அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, தொலைநிலை கல்வியில், இன்றும், நாளையும் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளும், ரெகுலர் மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும், புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இந்த தேர்வுகளுக்கு புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்