மேலாண்மை நுழைவு தேர்வு
இந்திய அரசின் அனுமதி பெற்று கடந்த 2003 ஆண்டு முதல் நடத்தப்படும் இத்தேர்வு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலை / கல்லூரிகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறைஐந்து பாடங்களில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் 150 நிமிடங்கள். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படும்.பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டிற்கு நான்கு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. காகித அடிப்படையிலான தேர்வு - பி.பி.டி., கணினி அடிப்படையிலான தேர்வு - சி.பி.டி., இணைய அடிப்படையிலான தேர்வு - ஐ.பி.டி., என மூன்று வகையாக நடத்தப்படுகிறது. பாடங்கள்மொழி புரிதல், தரவு பகுப்பாய்வு, கணித திறன்கள், நுண்ணறிவு மற்றும் விமர்சன பகுத்தறிவு, இந்திய மற்றும் உலகளாவிய சூழல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.தேர்வு மையங்கள்சென்னை, அகமதாபாத், கவுஹாத்தி, ஹைதராபாத், பெங்களூரு, இந்தோர், ஜெய்ப்பூர், மும்பை, கொச்சி, கொல்கத்தா, புது டெல்லி, புனே உள்ளிட்ட 36 தேர்வு மையங்களில் நடைபெறும். தேர்வர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.விண்ணப்பிக்கும் முறை: mat.aima.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம்: ரூ.2100விண்ணப்பிக்கும் தேதி: பி.பி.டி., - பிப்., 20, 2024சி.பி.டி., - மார்ச் 5, 2024 தேர்வு நடைபெறும் நாள்: பி.பி.டி., - பிப்., 25, 2024சி.பி.டி., - மார்ச் 10, 2024விபரங்களுக்கு: mat.aima.in