உள்ளூர் செய்திகள்

உணவில் தன்னிறைவு அடைவோம்!

ஒருபுறம் விவசாய நிலங்கள் குறைந்து வருவதோடு மட்டுமின்றி, நீர் பற்றாக்குறையும் அதிகரித்துவருகின்றன. மற்றொருபுறம் பருவநிலை மாறுபாடு பாதிப்புகளும், ஊட்டச்சத்து மிக்க உணவை உற்பத்தி செய்வதும் பெரும் சவாலாக விளங்குகின்றன. இத்தகைய சூழலில், வேளாண்மை படிப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதோடு, உணவு சார்ந்த புதிய தொழில்களை மேற்கொள்வதற்கான தேவையும் அதிகரித்துள்ளன.முக்கிய படிப்புகள்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் மொத்தம் 5 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுகின்றனர். பி.எஸ்சி., -அக்ரிகல்ச்சர் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வழங்கப்படுகின்றன. பி.எஸ்சி., -தோட்டக்கலை, பி.எஸ்சி., - அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.எஸ்சி.,-செரிகல்ச்சர், பி.எஸ்சி., - புட், நியூட்ரிசன் அண்டு டயட்டிக்ஸ், பி.எஸ்சி., - பாரஸ்ட்ரி, பி.டெக்., - அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், பி.டெக்.,- எனர்ஜி அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், பி.டெக்., -புட் டெக்னாலஜி, பி.டெக்.,- அக்ரிகல்ச்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக, பாரஸ்ட் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் படித்த 450 முன்னாள் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 120 பேர் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாகவும், 270 பேர் பாரஸ்ட் ரேஞ்சராகவும்  நாடு முழுவதும் பணிபுரிகின்றனர். மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப, அக்ரோ பாரஸ்ட்ரி, அக்ரிகல்ச்சுரல் பயோடெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, ரிமோட் சென்சிங் அண்டு ஜியோகிரபிக்கல் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆகிய துறைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.13 ஆயிரம் பேர்மேலும், பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் வாயிலாக, விவசாயிகள் மட்டுமின்றி யார்வேண்டுமானுலும் எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் இருந்துகொண்டு படிக்கும் வகையில் பல டிப்ளமா, சான்றிதழ் மற்றும் குறுகியகால படிப்புகள் வழங்கப்படுகின்றன. உரம் சார்ந்த கடைகள், விவசாயம் சார்ந்த மருந்து கடை ஆகியவற்றை துவங்க தமிழ்நாடு வேளாண்ம பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் படிப்பு படிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது 13 ஆயிரம் பேர் தொலைநிலைக் கல்வி மையம் வாயிலாக பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் குறித்த படிப்பும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடாக விளங்கும் நிலையில், 100 ஆண்டு சுதந்திர தினத்தில், உணவில் ஒரு தன்னிறைவு நாடாகவும், வளர்ந்த நாடாகவும் விளங்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏராளமான தொழில் நிறுவனங்களுடனும், கல்வி நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தவும், ஸ்டார்ட்-ஆப் நிறுவனங்கள் துவங்கவும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.-கீதாலட்சுமி, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்