கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: எழுத்து தேர்வு மூலம் உதவி பேராசிரியர் நியமனத்தை கண்டித்து சிவகங்கையில் அரசு கல்லுாரிகள் முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக அளவில் அரசு கல்லுாரிகளில் 7,000 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இக்கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு பணி அனுபவம், நேர்காணல் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிட்டது.இதை கண்டித்து நேற்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, அரசு மகளிர் கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜெயவீரகாந்தி, கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.