உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்புகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு - பி.வி.எஸ்சி., & ஏ.எச்., மற்றும் உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகியவற்றில் நான்கு ஆண்டுகள் கொண்ட பி.டெக்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் அல்லது தொழில்கல்வி பாடங்களை படித்திருக்க வேண்டும். சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், உடுமலை மற்றும் தேனி உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.விபரங்களுக்கு: www.tanuvas.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்