என்.டி.டி.எப்., உடன் ஒப்பந்தம்
ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி தேவஸ்தானம் மற்றும் அறக்கட்டளை (எஸ்.கே.பி.டி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளையுடன் (என்.டி.டி.எப்.,) இணைந்து எங்கள் அறக்கட்டளையின் கீழ், தொழில்பயிற்சி மற்றும் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன.என்.டி.டி.எப்., என்பது இந்திய அரசாங்கத்தின் எம்.எஸ்.டி.இ., (திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்) கீழ் இயங்கும், தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்.சி.வி.இ.டி.,) மூலம் அங்கீகரிக்கப்பட்ட முறையான சான்றிதழ் வழங்கும் அமைப்பு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம்.மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஸ்மார்ட் பேக்டரி மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐ.டி.,- உள்கட்டமைப்பு, முதுநிலை டிப்ளமோ இன் டூல்டிசைனிங் ஆகிய மூன்றாண்டு டிப்ளமா திட்டங்கள் வழங்கப்படுகிறது. நான்கு பள்ளிகள் மற்றும் ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இயக்கிவரும், ஸ்ரீகன்யகாபரமேஸ்வரி தேவஸ்தானம் மற்றும் அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து இக்கல்வித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.