உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் புத்தக கண்காட்சி

சிவகங்கை : காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் மாநில புத்தக திருவிழா ஜூன் 28ல் தொடங்கி ஜூலை 7 ம் தேதி வரை நடைபெற உள்ளது.காரைக்குடி புத்தக திருவிழாக்குழு சார்பில் கம்பன் மணி மண்டபத்தில் ஜூன் 28 அன்று மாலை 5:30 மணிக்கு புத்தக திருவிழா தொடங்குகிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் துவக்கி வைக்கிறார். அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், நகராட்சி தலைவர் முத்துத்துரை முன்னிலை வகிக்கின்றனர்.காட்டு தலைவாசல் பள்ளிவாசல் தலைமை இமாம் முகம்மது பத்ருத்தீன் யூசுபி, சி.எஸ்.ஐ., துாய பேருது சர்ச் பங்கு தந்தை சந்தோஷம், வி.கே.என்., நாராயணன், சென்னை பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு வகிக்கின்றனர்.புத்தக திருவிழாவில் 30 ஸ்டால்களில் 20 க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் 2.5 லட்சம் புத்தகம் வரை கண்காட்சியில் இடம் பெறும்.ஒவ்வொரு புத்தகத்தின் மீதும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. புத்தக திருவிழா தினமும் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை செயல்படும். சனி, ஞாயிறுகளில் மட்டுமே காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்.ஜூலை 7 ம் தேதி வரை நடக்கும் இப்புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடக்கும். மாலை 6:00 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி நடைபெறும். காரைக்குடி புத்தக திருவிழாக்குழு தலைவர் சுவாமி, வெங்கடாச்சலம், நாச்சியப்பன், ஜெயங்கொண்டான் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்