கல்லுாரியில் பயிற்சி பட்டறை
பல்லடம்: பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கில துறை சார்பில், ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.பொள்ளாச்சி டி.ஆர்.எச். அகாடமி நிறுவனர் ரோனால்ட் பேசியதாவது:ஏ.ஐ. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. அதனுடைய வேகத்துக்கு இணையாக, நாம் நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நடைமுறை, படைப்பாற்றல் மற்றும் கல்வி சார்ந்த வழிகளில் புரிந்துகொண்டு பயன்படுத்துவதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பர்சனல் பிராண்டிங், வடிவமைப்பு, ஆராய்ச்சி, கற்றல், வீடியோ தயாரிப்பு, ஒலி உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் மிக அதிகம். இத்தொழில் நுட்பத்தின் தற்போதைய வரம்புகள், எதிர்கொள்ளும் சவால் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்று வழங்கப்பட்டன. கவுரவ விரிவுரையாளர் முகுந்தா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.